ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடைக்கு காரணமான பீட்டா அமைப்பு விருதை பெருமிதத்துடன் பெற்றுக்கொண்ட நடிகர் தனுஷ், தற்போது “அந்த விருதை பெற்றதை அவமானமாக கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதற்குக் காரணமான  பீட்டா அமைப்பை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் தனுஷ், “எந்தவொரு அரசியல் தலைவவர்களின் வழிகாட்டுதலும் இல்லாமல், சாதி, மத வேறுபாடு இன்றி தமிழ்நாட்டு மக்கள் ஒரே உணர்வோடு மிகவும் கண்ணியமாக நடத்தும் அறவழிப் போராட்டத்தை பார்த்து வியந்து தலை வணங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “”சைவ உணவு சாப்பிடுகின்றவன் என்ற முறையில் எனக்கு விருது கொடுத்து சிறப்பித்தது பீட்டா அமைப்பு. அந்த விருதை பெற்றதை பெரும் அவமானமாக கருதுகிறேன். அதற்காக மிகவும் வருந்துகிறேன். நானோ எனது குடும்பத்தாரோ யாரும் பீட்டா அமைப்பில் உறுப்பினராக இல்லை” என்றும் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.