ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் , தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் படம் ‘அத்ரங்கி ரே’ . இந்தப் படத்தில் சாரா அலி கான் தனுஷின் ஜோடியாக நடிக்கிறார்.

அக்‌ஷய் குமார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் போஸ்டர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சாரா. ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், ரஹ்மானின் இசையில் நடிப்பது ஆசிர்வாதம் எனவும் கூறியுள்ளார் .

அடுத்த வருடம் பிப்ரவரி 14-ம் தேதி அன்று படம் வெளியாகவுள்ளது . பூஷன் குமார் தயாரிப்பில் ஹிமான்ஷு சர்மா திரைக்கதை எழுதியுள்ள ‘அத்ரங்கி ரே’ படத்தின் படப்பிடிப்பு மார்ச் 1 முதல் தொடங்குகிறது.