கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்க கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘தாக்கட்’.

சோஹம் ராக்ஸ்டார் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ரேனிஷ் காய் இயக்கியிருந்தார்.

100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் மிகவும் மோசமான வசூலை பெற்ற திரைப்படமாக மாறியிருக்கிறது.

முழுக்க முழுக்க ஆக்சன் படமான ‘தாக்கட்’ படத்திற்கு சென்சார் போர்டு ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்தது.

மே 20 ம் தேதி படம் வெளியானது முதல் ரசிகர்கள் யாரும் இல்லாததால் நாளுக்கு நாள் காட்சிகளின் எண்ணிக்கையும், திரையரங்குகளின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பின் திரையரங்குக்கு நிகராக ஓ.டி.டி.யிலும் படங்கள் வெளியாகி வருகின்றது. திரையரங்கில் வசூலை குவித்த படங்கள் சில நாட்களிலேயே ஓ.டி.டி. நிறுவனங்களுக்கும் உரிமை வழங்கி மேலும் லாபமீட்டி வருகிறது.

சில பெரிய நடிகர்களின் படங்கள் திரையரங்கில் வெளியாவதற்கு முன்பே ஓ.டி.டி. உரிமையும் விற்றுவிடுகிறது.

போட்ட பணத்தை கூட எடுக்காத நிலையில், ‘தாக்கட்’ படம் வெளியானதும் ஓ.டி.டி. விற்பனை குறித்து பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு எந்த ஒரு நிறுவனமும் இந்த படத்தை வாங்க தயங்கி வருவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.