சைக்கிளில் சென்று ஆய்வு நடத்திய டிஜிபி சைலேந்திரபாபு 

Must read

சென்னை: 
சென்னையிலிருந்து திருவள்ளூருக்கு 45 கிலோ மீட்டர் சைக்கிளில் சென்ற டிஜிபி சைலேந்திரபாபு  அங்குள்ள தீயணைப்புத்துறை அவ்வகத்தை ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் தாலுகா காவல் நிலையம் மற்றும் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்த டிஜிபி சைலேந்திரபாபு,   அங்கு கோப்புகள் சரியாக உள்ளனவா, உரிய விதிமுறைகள் படி எஃப்.ஐ.ஆர் பதியப்படுகிறதா உள்ளிட்ட சோதனைகளை அவர் செய்தார்.
பல்வேறு குற்றச் சம்பவங்கள் குறித்தும் காவலர்களின் பணியிட மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்தும் டிஜிபி சைலேந்திரபாபு கேட்டறிந்தார். பிறகு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்த பெண் காவலர்களிடம் பேசினார். இதனைத்தொடர்ந்து காவலர் குடியிருப்பில் உள்ள சிறுவர் சிறுமிகளின் சிலம்பாட்டத்தைப் பார்த்து அவர்களுக்கு ஊக்கப்பரிசு அளித்தார்.

More articles

Latest article