விருதுநகர்: ஆடிமாத பிரதோசத்தை முன்னிட்டு சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய  ஆகஸ்டு 2ந்தேதி வரை அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.


ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் 3500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். இங்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி ,பிரதோஷம் நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.

இதற்கிடையில், மலைப்பகுதியில், காட்டுத்தீ பரவியதால், கடந்த முறை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  சாத்தூர் வனசரகம் ஐந்தாவது பீட்டில் சதுரகிரி மலையை ஓட்டியுள்ள ஊஞ்சல்வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியது. இதன் காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி மலை ஏற தடை விதிக்கப்பட்டது. கடந்த 15ம் தேதி சதுரகிரி மலைக்கு பக்தர்கள் சென்ற நிலையில், அங்க காட்டுத்தீ பரவியதால் பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் காட்டூத்தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து,  ஆடி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டுக்காக 30ந்தேதி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சதுரகிரி மலையேறி சுவாமி தரிசனம் செய்யலாம் என வனத்துறை கூறியுள்ளது.