சென்னை

ந்த ஆண்டுக்கான தேசிய விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் சென்ற வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன.

இதில் ‘புஷ்பா’ படத்தில் நடித்த நடிகர் அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். இந்த படத்தின் பாடல்களுக்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் விருது வென்றுள்ளார். ‘புஷ்பா’ படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ள தேவி ஸ்ரீ பிரசாத், சென்னை கோடம்பாக்கத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து அவர் காலில் விழுந்து ஆசி பெற்றார். தமக்கு இளையராஜா மூலம் கிடைத்த உத்வேகமே தேசிய விருது நோக்கி அழைத்துச் சென்றதாக தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார்.