சென்னை: அரக்கோணம் அருகே பாமகவுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்ட காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை பாமகவினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. காவல்துறையினர் இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்னர்.

அதிமுக கூட்டணியில்  பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த தொகுதிகளில் பாமகவை எதிர்த்து பிரசாரம் மேற்கொள்ளப்போவதாக வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை தெரிவித்திருந்தார். இ தனது தந்தை மறைவுக்கு பின் எங்கள் குடும்பத்தை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள் அதனால், பாமக வேட்பாளர்களை எதிர்த்து பிரசாரம் செய்வேன் என்றும் கூறியிருந்தார்.

அதன்படி,  விருதாம்பிகை   பாமகவை எதிர்த்து அரக்கோணம் அருகே  சோளிங்கரில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பாமக தலைவர்  ராமதாஸ் பற்றி கடுமையாக விமர்சித்தார். தந்தையைக் கொன்ற ராமதாஸ் கட்சி வெற்றிபெறக்கூடாது என்றார். இதற்கு பாமகவினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து விருதாம்பிகை பிரசாரம் மேற்கொள்ள தடை ஏற்படுத்தினார். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.  இதனால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

அதுபோல வந்தவாசியில் பிரசாரம் மேற்கொண்டபோதும் பிரச்சினை ஏ ற்பட்டது., வந்தவாசி (தனி) தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் அம்பேத்குமாரை ஆதரித்து காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை வந்தவாசி தேரடியில் பிரச்சாரம் செய்தார். பின்னர் இங்கிருந்து பஜார் வீதிக்கு சென்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த பா.ம.கவை சேர்ந்தவர்கள் விருதாம்பிகை, தி.மு.க வேட்பாளர் அம்பேத்குமார் வாகனத்தைத் தடுத்து நிறுத்தி தகராறு செய்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. பின்னர், அங்கிருந்த காவல்துறையினர் பா.ம.கவினரை அழைத்துச் சென்றனர். இதையடுத்து , காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.