சென்னை: கள்ள உறவில் பிறந்த குறைபிரசவம் எடப்பாடி பழனிச்சாமி என கடுமையான முறையில், விமர்சித்த திமுக துணைப்பொதுச்செயலாளர், தற்போது தனது சர்ச்சை பேச்சுக்னகு மன்னிப்பு கோரியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தனிமனித தாக்குதல்களும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பொதுக்கூட்ட மேடை ஒன்றில் பேசிய திமுக எம்.பி.யும், கட்சியின் துணைப்பொதுச்செயலாளரான ஆ.ராசா, அதிமுகவினரின் பிரசாரத்துக்கு திமுக குடும்ப கட்சி என்ற பிரசாரத்துக்கு எதிராக பேசும்போது,

ஜனநாயகத்தை காப்பாற்ற சிறைக்கு சென்றவர் ஸ்டாலின். அவர் படிப்படியாக உயர்ந்து இக்கட்சியின் தலைவர் ஆகியுள்ளார் . தற்போது அவர் முதல்வராக போகிறார். அவர் திணிக்கப்பட்டவர் அல்ல. முறைப்படி பெண் பார்த்து நிச்சயம் செய்து, திருமணம் நடத்தி, சாந்தி முகூர்த்தம் நடத்தி சுகப்பிரசவத்தில் பிறந்தவர்.

எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதா இருக்கும் போது கூட யாருக்கும் தெரியாது. அவர் ஊர்ந்து வந்தவர். நல்ல உறவில் சுகப்பிரசவத்திற்கு பிறந்தவர் ஸ்டாலின். கள்ள உறவில் பிறந்த குறைபிரசவம் ஈபிஎஸ். நல்ல குழந்தைக்கு தாய்ப்பால் போதும்; குறைப்பிரசவ குழந்தையை காப்பாற்ற டெல்லியிலிருந்து மோடி எனும் டாக்டர் வருகிறார் என விமர்சித்து இருந்தார்.

ஆ.ராசாவின் முதல்வர் மீதான தனிப்பட்ட தாக்குதல் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.  எடப்பாடியின் மறைந்த தாயார் தவுசயம்மாள் குறித்து விமர்சித்தற்கு, திமுக எம்.பி. கனிமொழி, ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.  முதல்வரின் ஆ.ராசாவின் விமர்சனம் குறித்து கண்ணீருடன் பேசினார்.  ஆ.ராசாவின் அருவறுப்பான பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானதுழ. அதிமுகவினரும் அதிமுக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் இதற்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். பல இடங்களில் அதிமுக பெண்கள் அணியினர் போராட்டம் நடத்தினர். மேலும் பெண்கள் அமைப்பினரும் ஆ.ராசாவின் பேச்சு கண்டனம் தெரிவித்தனர். இதனால், திமுகமீதானே இமேஜை மக்களிடையே குறையும் வாய்ப்பு உருவானது.

இந்த நிலையில், ஆ.ராசா தான் பேசிய பேச்சுக்கு பகிரங்கமாக மன்னிப்பு  கோரியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்தவர், முதலமைச்சர் பழனிசாமி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கோருகிறேன், முதல்வர் கண்கலங்கிய செய்தி கேட்டு மனம் வருத்தமுற்றேன்,  என் பேச்சால் முதலமைச்சர் கலங்கியதால் மன்னிப்பு கோருகிறேன்  இடப்பொருத்தமற்று சித்தரிக்கப்பட்டு தவறாக புரிந்துகொள்ளப்பட்ட எனது பேச்சிற்காக எனது அடிமனதின் ஆழத்திலிருந்து வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்னும் ஒரு படி மேலே போய் சொல்ல வேண்டுமென்றால், முதல்வர் பழனிசாமி அரசியலுக்கு அல்லாமல், உள்ள படியே காயப்பட்டிருப்பதாக உணர்வாரேயானால் என மனம் திறந்த மன்னிப்பை கோருவதில் எனக்கு சிறிதும் தயக்கமில்லை.  எனது பேச்சு, தனி மனித விமர்சனம் அல்ல; பொதுவாழ்வில் உள்ள 2 ஆளுமைகளின் மதிப்பீடு தான்,  முதலமைச்சர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கவில்லை என்றவர், என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, என் 40 நிமிட உரையை மக்கள் முழுமையாக கேட்டால், நான் தவறாக பேசவில்லை என தீர்ப்பளிப்பர்.

இவ்வாறு அவர் கூறினார்.