விஷ்ணுபதி புண்ணிய காலம் !
வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகிய மாதங்களின் முதல் நாள் விஷ்ணுபதி புண்ணிய காலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இவை பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை.
ஏகாதசிக்கு இணையான இந்தப் புண்ணியகாலத்தில் விஷ்ணுவை வழிபடுவது மிகவும் நன்மை பயக்கும் என்கின்றன சாஸ்திரங்கள். இந்தப் புண்ணிய காலத்தில் செய்யப்படும் விஷ்ணு வழிபாடு மிகவும் பலன் அளிக்கக் கூடியது.
சார்வரி வருடம்,  வைகாசி 1 முதல் நாளில் (May14)  விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் பகவான் விஷ்ணுவை வழிபட்டு நன்மைகள் அடைவோம்.
விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக சங்கு சக்ரதாரியாகப் பெருமாள் இருக்கும் ஆலயங்களுக்கு சென்று பெருமாளை வழிபட வேண்டியது அவசியம்.
இந்தப் புண்ணிய காலத்தில் பெருமாள் சன்னிதியை 27 முறை பிரதட்சிணம் வருவது விசேஷம். ஆலயங்களில் இந்த நாளில் நடக்கும் அபிஷேக ஆராதனைகளைக் கண்டு வழிபாடு செய்ய மனம் அமைதி பெறும்.
இந்த நாளில் மகாலட்சுமி பூஜை, கோபூஜை ஆகியன செய்வது மிகவும் பலன் தரும். வீடுகளில் விளக்கேற்றி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் மிகுதியான பலன்களைக் கொடுக்கும்.
ஓம் நமோ நாராயணா !