டில்லி

ரும் 22 ஆம் தேதி நடைபெறும் ராமர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு விடுமுறை அறிவித்துள்ள மாநிலங்கள் விவரம் இதோ:

அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்படும் ராமர் கோவில் குடமுழுக்கு விழா வரும் 22 ஆம் தேஹ்டி நடைபெறுகிறது. கோவிலில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் 350 தூண்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த தூண்கள் மூலம் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. ராமர், சீதா தேவி, லட்சுமணன் சன்னதி உள்பட 44 நுழைவு வாயிலுக்கு, 44 கதவுகள் மாமல்லபுரம் சிற்பக்கூடத்தில் பயின்ற சிற்பிகளால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 22-ந் தேதியன்று மத்திய அரசு அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் அனைத்து நிறுவனங்களும் அன்று பிற்பகல் 2.30 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பல மாநில அரசுகளும் ஜனவரி 22-ந் தேதி விடுமுறையை அறிவித்துள்ளன.

திரிபுரா: திரிபுரா மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களும் ஜனவரி 22-ந் தேதி பிற்பகல் 2.30 மணிவரை மூடப்படும். அதாவது அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் : உத்தரப்பிரதேசத்தில் ஜனவரி 22-ந் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், மதுபான கடைகள் அனைத்தும் அன்றைய தினம் மூடப்படும்.

மத்தியப் பிரதேசம் : மத்தியப் பிரதேச மாநிலத்திலும் பள்ளிகள் அனைத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வர்த்தக நிறுவனங்கள், மதுபான கடைகளும் அன்றைய தினம் மூடப்படும்.

கோவா: கோவா மாநிலத்தில் ஜனவரி 22-ந் தேதி முழுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும்

அரியானா: அரியானாவிலும் கல்வி நிறுவனங்கள், மதுபான கடைகள் உள்ளிட்டவை எதுவும் ஜனவரி 22-ந் தேதி இயங்காது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒடிசா: பாஜக அல்லாத பிஜூ ஜனதா தளம் ஆளும் ஒடிசா மாநில அரசும் ஜனவரி 22-ந் தேதி விடுமுறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில்  நீதிமன்றங்கள் அரை நாள் மட்டும் இயங்கும்.

புதுச்சேரி:  புதுச்சேரியில் வரும் 22-ம் தேதி பொது விடுமுறை அறிவித்து அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான்:  பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநில அரசும் அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது.