காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோவில் – ஒரு கண்ணோட்டம்

காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோவில், பல்லவ மன்னன் நந்தி வர்மனால், 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.  மகாவிஷ்ணுவுக்காக எழுப்பப்பட்டுள்ள இக்கோயிலின் மூலஸ்தானம் மூன்று தனிப்பட்ட அடுக்குகளைக் கொண்டது.

கோவிலின் மூலஸ்தானத்தில், தேர்ந்த சிற்ப வேலைப்பாடுகளோடு, உட்கார்ந்த, நின்ற மற்றும் படுத்த கோலங்களில், விஷ்ணுவின் மிகப் பெரும் திருவுருவச் சிலைகளைக் காணலாம். இந்த கோவிலுக்கு வருடம் முழுவ்தும் விஷ்ணுவின் அருளை வேண்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்த கோவிலின் முக்கியமான கவர்ந்திழுக்கும் அம்சமான, “ஆயிரங்கால் மண்டபத்தை” காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், இங்கு வருகின்றனர். இத்தூண்கள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு சிலைகள் செதுக்கப்பட்டு, ஒவ்வொரு தூணும் தனிச்சிறப்புடன் திகழ்கின்றது.

வைகுந்த பெருமாள்கோவிலின் நடைபாதைகள் யாவற்றையும், சிங்கத்தின் சிலை செதுக்கப்பட்டுள்ள தூண்கள் தாங்கிப் பிடிக்கின்றன.  இந்த கோவிலின் கட்டுமானம், இந்து மதச் சிறப்பு மட்டுமின்றி, வரலாற்றுச் சிறப்பு மிக்கதும் ஆகும்.

கோவிலின் சுவர்களில், சாளுக்கியருக்கும், பல்லவர்களுக்கும் நடைபெற்ற போரினைப் பற்றிய குறிப்புகள் செதுக்கப்பட்டுள்ளன.