கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட விஐபி-க்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களின் தகவல்களும் சமூக வலைதளத்தில் பகிரங்கமாகப் பகிரப்பட்டுள்ளது.

ப. சிதம்பரம், ஜெயராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால், கனிமொழி, அண்ணாமலை, கார்த்தி சிதம்பரம் மற்றும் பத்திரிகையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்ட ஏரளாமான பிரபலங்களின் வாக்காளர் அடையாள அட்டை விவரம், பாஸ்போர்ட் எண், ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து தரவுகளும் பொதுவெளியில் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் முக்கிய நிகழ்வுகள் குறித்த தரவுகள் எதுவும் மத்திய அரசு வசம் இல்லை என்று கூண்டில் ஏறி சத்தியம் செய்த மத்திய அரசு தற்போது கோட்டை போல் மதிலெழுப்பி தன் வசம் பாதுகாப்பாக வைத்திருந்த ஆதார் உள்ளிட்ட தரவுகள் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கும் வரை கோட்டை விட்டு தூங்கியிருக்கிறது.

கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட விஐபி-க்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களின் தகவல்களும் சந்தைக்கு வந்ததை அடுத்து மத்திய அரசின் தரவு பாதுகாப்பு சட்டம் குறித்து சமூக வலைதளத்தில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

சந்தி சிரிக்கும் மத்திய அரசின் இந்த தரவு பாலிசி குறித்து கார்த்தி சிதம்பரம், “டிஜிட்டல் இந்தியா என்று உரக்க கூறிக்கொண்டு மத்திய அரசு தனது குடிமக்களின் தனியுரிமையை பரிதாபமாக புறக்கணித்துள்ளது.

எனது சொந்த தரவு உட்பட COVID-19 தடுப்பூசியைப் பெற்ற ஒவ்வொரு இந்தியரின் தனிப்பட்ட தரவுகளும் பொதுவெளியில் கிடைக்கிறது.

இது நடக்க அனுமதித்தது யார்? தரவு பாதுகாப்பு சட்டத்தை வைத்துக் கொண்டு மத்திய அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதற்கு பதில் சொல்ல வேண்டும்” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.