சென்னை: வங்கக்கடல் மற்றும்  அரபிடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் 2 நாள்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி தமிழகத்தை கடந்து கனமழையை கொடுத்து அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து உருமாறி இருக்கிறது. அதே நேரத்தில் வங்கக்கடலில் அந்தமான் அருகில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இருக்கிறது. வங்கக்கடல், அரபிக்கடல் ஆகிய 2 இடங்களிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் தமிழ்நாட்டில்  இன்று முதல் 2 நாள்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம்  தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் கூறியுள்ளது. இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கன மழையும் ஈரோடு, சேலம், கன்னியாகுமரி, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், இது பிற்பகலுக்கு மேலே மாலை நேர பகுதியில் மழையை கொடுக்கும்.

அரபிக்கடலில் இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியை பொறுத்தவரை மேற்கு திசை காற்றை வலுப்படுத்துகிறது. இதன் காரணமாக கேரளா, கர்நாடகா, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

. இந்த 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகளுமே புயலாக மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் கிடையாது. காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ மட்டுமே இருக்கும்.

இதுபோனற் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்கனவே 2019-ம் ஆண்டு உருவாகியதாகவும், அப்போது புல்புல் புயல் வங்கக்கடலிலும், மகா புயல் அரபிக்கடலிலும் உருவாகி இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,

தற்போது 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி இருப்பதால் கேரளா, கர்நாடகாவின் கடலோர பகுதிகளிலும், அரபிக்கடலிலும் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும். எனவே மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரித்ள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 20-ந்தேதிக்கு பிறகு தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.