திருச்சி,

ரசு அனுமதியின்றி டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு துண்டுபிரசுரம் விநியோகித்ததாக டிடிவி தினகரன் மீது திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெங்கு காய்ச்சல் குறித்து, திருச்சி, ராகவேந்திரா தெருவில் அனுமதியின்றி ஊர்வலமாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கியதாகவும், நிலவேம்பு கசாயம் விநியோகித்ததாகவும், அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அணியினர்மீது புகார் கூறப்பட்டது.

ந்த புகாரின் அடிப்படையில் டிடிவி தினகரன் அணியினர்மீது  ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிடிவி. தினகரன் உட்பட நான்கு நபர்கள் மீது, பொதுஇடங்களில் சட்டவிரோதமாக கூட்டம் சேர்ப்பது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக டிடிவி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் உலா வருகிறது.

ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டதாக தினகரன் உள்பட அவரது ஆதரவாளர்கள்மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.