டில்லி:

ரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில், தினகரன் அணியினரின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்துள்ளது.

முடக்கப்பட்டுள்ள இரட்டை இலையை மீட்க இபிஎஸ்ஓபிஎஸ் அணியினரும், டிடிவி அணியினரும் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பிற்பகல் இறுதி விசாரணை நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.

அதன்படி இன்று பிற்பகல் 3 அளவில் விசாரணை தொடங்கியது. அப்போது டிடிவி தரப்பினர், செப்., 29ம் தேதிக்கு பின்பு, ஓபிஎஸ்இபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஏற்க கூடாது. பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ள சிலைரை நேரில் அழைத்து விசாரிக்க, அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

ஆனால், டிடிவி தரப்பினரின் இந்த கோரிக்கையை தேர்தல் கமிஷன் ஏற்க மறுத்து விட்டது. எழுத்துப்பூர்வமாக ஆவணங்களை தாக்கல் செய்தால் மட்டுமே ஏற்க முடியும் என தெரிவித்து விட்டது.

மேலும், பிரமாண பத்திரங்களில் கையெழுத்திட்டவர்களை நேரில் அழைத்து விசாரிக்க இயலாது என்றும் கமிஷன் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு விட்டது.

இதன் காரணமாக டிடிவி அணியினருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.