சுங்கச்சாவடிகளில் டிச.15 வரை பழைய ரூ.500 நோட்டு செல்லுபடியாகும்

Must read

வரும் டிசம்பர் 15-ஆம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் பழைய 500 ரூபாய் நோட்டு செல்லுபடியாகும் என்றும், வரும் டிசம்பர் 2-ஆம் தேதி நள்ளிரவு வரை சுங்கச்சாவடிகளில் வரி வசூல் நிறுத்திவைப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது

tollgate

பழைய செல்லாத நோட்டுக்கள் அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள் மற்றும் சுங்கச் சாவடிகளில் நவம்பர் 24 வரை செல்லுபடியாகும் என்று அறிவித்திருந்தது. அந்த கெடு இன்றோடு முடிவடைவதால் அது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

tolltweet

ரூபாய் நோட்டு தடையை அடுத்து வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் மக்கள் காத்திருக்கின்றனர். இதன் விளைவாக மக்களுக்கு ஏற்பட்ட பல்வேறு இன்னல்களை குறைக்கும் வகையில் ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. விவசாயிகள் விதைகளை 60 நாட்கள் வரை பழைய நோட்டுக்களை கொடுத்து வாங்கலாம், வீடு, வாகனம் மற்றும் விளைநிலங்களுக்காக வாங்கிய கடன்களுக்கான தவணையை பழைய நோட்டுக்களில் செலுத்தலாம் போன்றவை இவற்றில் அடக்கம்.
நிலைமையை சமாளிக்க வங்கிகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன.

More articles

Latest article