டில்லியில் கொடூரம் : நண்பனால் பலாத்காரம் செய்யப்பட்டு நான்காம் மாடியில் இருந்து வீசப்பட்ட பெண்

டில்லி

ண்பரால் பலாத்காரம் செய்யப்படு, இன்னும் முடிவடையாத கட்டிடத்தின் நான்காம் மாடியில் இருந்து வீசப்பட்ட பெண் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார்.

டில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பணிபுரியும் 24 வயது ஊழியர் மற்றொரு ஓட்டல் ஊழியையுடன் நட்பாக இருந்துள்ளார்.  இவர்கள் இருவரும் வேறு இரு நண்பர்களுடன் மோட்டார் பைக்கில் வெளியே சென்றுள்ளனர்.  பஞ்சாபி பாக் அருகே போலீஸ் சோதனையின் போது மோட்டார் பைக்கின் ஆவணங்கள் இல்லாததால் அந்த பைக் போலீசால் கைப்பற்றப்பட்டது.  நால்வரும் ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவில் பயணம் செய்தனர்.   பேகம்பூர் பகுதிக்கு சென்றதும் ஓட்டல் ஊழியர் தானும் தன் நண்பியும் சென்று தனது தந்தையின் காரை எடுத்து வருவதாக சொல்லி விட்டு அந்தப்பெண்ணை அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் அவரை அருகில் இருந்த இன்னும் முடிவடையாத ஒரு கட்டிடத்தின் நான்காம் மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.  அங்கு அவரை பலாத்காரம் செய்ய ஆரம்பித்தார்.  அதை தடுக்கு அந்தப் பெண் கடும் கூச்சலிடவே,  நான்காம் மாடியில் இருந்து அந்தப் பெண்ணை தள்ளி வீசி உள்ளார்.  இரத்த வெள்ளத்தில் கிடந்த அந்தப் பெண்ணை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலிசுக்கு தகவல் தெரிவித்தனர்.

படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்தப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   தீவிர சிகிச்சையில் உள்ள அந்தப் பெண்ணுக்கு இன்னும் சுய நினைவு திரும்பவில்லை.   வாலிபரை போலீஸ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.   அந்தப் பெண்ணுக்கு சுயநினைவு வந்த பின்னரே அவரிடம் வாக்குமூலம் பெற முடியும் என தெரிகிறது.