இஸ்லாமாபாத்,

ந்தியா உள்பட அண்டை நாடுகளுடன் ஆக்கப்பூர்வமான உறவையே விரும்புகிறோம் என பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் ஷாகித் கஹான் அப்பாஸி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் சுதந்திர தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் வாழ்த்து செய்தி  விடுத்துள்ளார்.

அதில்,  ’உலக நாடுகள்,  குறிப்பாக இந்தியா உள்பட  அண்டை நாடுகளுடன் இறையாண்மை சமத்துவம் அடிப்படையில் ஆக்கப்பூர்வமான உறவைப் பேணவே பாகிஸ்தான் விரும்புகிறது.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தெற்காசியாவில் நிலவி வரும் மோதல்போக்கால், மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெற்காசிய பிராந்தியத்தில் நிலவிவரும் பிரச்னைகளுக்கு இணக்கமான தீர்வு காணாமல் வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியாது.

இந்த பிராந்தியத்தில் நிலவும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் உலக நாடுகள் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாக, தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி நிலவ, காஷ்மீர் விவகாரம் போன்ற பிரச்னை களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் அடிப்படையில் சுமுகத் தீர்வு காணப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் அப்பாஸி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில்,  தகுதிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து,  பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராக ஷாகித் அப்பாஸி தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.