டில்லி: ‘தமிழ்நாடு இல்லம்’ பெயரில் மாற்றமில்லை…மத்திய, மாநில அரசுகள் உறுதி

Must read

டில்லி:

டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் பெயர் மாற்றப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.


டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், வைகை இல்லம் என்றும், பொதிகை இல்லம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக சமூக வலை தளங்களிலும், சில நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் இந்த செய்தி தவறு என்று மறுக்கப்பட்டுள்ளது. டில்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள கவுட்டில்யா மார்க் வளாகம் அதாவது பழயை தமிழ்நாடு இல்லம் வைகை தமிழ் இல்லம் என்றும், தகேந்திர ஜித் மர்க் பகுதியில் உள்ள கூடுதல் விருந்தினர் மாளிகை பொதிகை தமிழ் இல்லம் என்று அழைக்கப்படும்.

இந்த இரு இல்லங்களும் தமிழ்நாடு இல்லம் என அழைக்கப்படும். மேற்கோள் காட்டி குறிப்பிடுவதற்காக வைகை, பொதிகை என பெயரிடப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாடு இல்லம் என்ற பெயர் மாற்றப்படவில்லை என்று மத்திய அரசின் டில்லி வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. இதை தமிழக அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.

More articles

Latest article