டில்லி:

ணையதளங்களில் நடைபெற்று வரும் சூதாட்ட இணையதளங்களுக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், வழக்கை  டெல்லி உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இணைதளங்களில் பணம் வைத்து விளையாடப்பட்டு வரும் போக்கர், பிளாக் ஜாக் (poker and blackjack) போன்ற இணையதள விளையாட்டுகளில் ஏராளமானோர் பணத்தை இழந்து வருகின்ற னர். இதன் காரணமாக, மக்களை சூதாட அனுமதிக்கும் சட்டவிரோத இணையதளங்களுக்கு தடை கேட்டும், இதன் மூலம் அந்நிய முதலீடு நாட்டை விட்டுச் செல்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டு  இந்த ஆட்டங்களுக்கு தடை விதிக்க கோரி டில்லி உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிப்பதாகவும், வழக்கில் இடைக்காலத்தடை எதுவும் விதிக்க முடியாத  என்றும் உத்தரவிட்டனர்.

இதுகுறித்து மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.