ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க ஜான்சன் நிறுவனத்துக்கு உத்தரவிட்டதற்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

Must read

புதுடெல்லி:

தவறான செயற்கை இடுப்பு பொருத்தியதால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.


அமெரிக்காவை சேர்ந்த ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான பவுடர் தயாரிப்பில் பிரபலம். இந்த பவுடரில் சேர்க்கப்படும் பொருட்கள் கேன்ஸர் நோயை ஏற்படுத்தும் என்ற சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் செயற்கை இடுப்பு பொருத்தி நோயாளி ஒருவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த செயற்கை இடுப்பை ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்தது.

இது போலியானது என்று தெரியவந்ததால், பாதிக்கப்பட்டவருக்கு ஏப்ரல் 10-ம் தேதிக்குள் ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்குமாறு ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்குமாறு ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இழப்பீடு வழங்க மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

 

More articles

Latest article