ஜெ. நினைவிடத்தில் தீபா திடீர் மவுன அஞ்சலி

சென்னை:

ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா திடீரென அஞ்சலி செலுத்தினார்.

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். இவர் சசிகலாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். ஒ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்தார். பின்னர் அவரிடமிருந்து விலகி செயல்பட்டு கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என்று தீபா அறிவித்திருந்தார். சசிகலா, திமுக அல்லாத கட்சிகள் ஆதரவு அளித்தால் ஏற்றுக் கொள்வேன் என்று தீபா அறிவித்திருந்தார். இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 14ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இன்று இரவு மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு தீபா வந்தார். அங்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு படிவம், ஆவணங்களை நினைவிடத்தில் வைத்து சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தினார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


English Summary
deepa paid homeage at jayalalitha memorial