டெல்லி:

2016ம் ஆண்டில் மோசடிகள் நடந்த வங்கிகள் பட்டியலில் ஐசிஐசிஐ முதல் இடத்தை பிடித்துள்ளது. எஸ்பிஐ இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என்பது ரிசர்வ் வங்கியின் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான முதல் 9 மாதங்களில் ரூ. 1 லட்சம் மற்றும் அதற்கு மேம்பட்ட தொகைகளுடன் 455 மோசடி வழக்குகள் ஐசிஐசிஐக்கு எதிராக பதிவானது. எஸ்பிஐ மீது 429 வழக்குகள், ஸ்டாண்டர்டு சார்ட்ர்டு மீது 244 வழக்குகள், ஹெச்டிஎப்சி மீது 237 வழக்குகள் பதிவானது.

ஆக்சிஸ் வங்கி மீது 189 வழக்குகள், பாங்க் ஆப் பரோடா மீது 176 வழக்குகள், சிட்டி பாங்க் மீது 150 வழக்குகள் பதிவாகியள்ளது. எஸ்பிஐ.யில் ரூ. 2 ஆயிரத்து 23 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2 ஆயிரத்து 250 கோடி ரூபாய், ஆக்ஸிஸ் வங்கியில் ஆயிரத்து 989 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது.

வங்கி ஊழியர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சகத்துக்கு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ.யில் 64 ஊழியர்கள், ஹெச்டிஎப்சி.யில் 49 ஊழியர்கள், ஆக்சிஸ் வங்கியில் 35 ஊழியர்கள் இந்த மோசடியில் ஈடுபட் டுள்ளனர்.

பல்வேறு தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளில் 450 ஊழியர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 17 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மோசடி நடந்து 3 ஆயிரத்து 870 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.