ஒரே பள்ளியைச் சேர்ந்த ஆறு சிறுமிகள் அடுத்தடுத்து தற்கொலை!

Must read

போபால்,

ம.பி.யில் ஒரே பள்ளியை சேர்ந்த மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளது அந்த பகுதியில் பரபரப்பை உருவாக்கி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் சபி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வெல்வேறு வகுப்புகளில் படிக்கும் ஆறு மாணவிகள், ஒருவர் பின் ஒருவராக தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டனர்.

இந்த ஆறு தற்கொலைகளும் 3 வார இடைவெளிக்குள் நடைபெற்றுள்ளது. தொடர் மரணம் கார்பாக அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

தற்கொலை செய்துகொண்ட 6 மாணவிகளும் ஒரே பள்ளியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், வெவ்வேறு கிராமப்பகுதியை சேர்ந்தவர்கள். ஏன் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பதற்கான எந்தவித ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. அவர்களும் எந்தவித கடிதமோ, தகவலோ தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் குடும்பத்தினரை விசாரணை செய்தபோதும், மாணவி களின் தற்கொலை குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என்று போலீசார்.

மாணவிகளின் திடீர் மரணம் குறித்து அந்த பகுதி மக்கள் பலவாறாக பேசி வருகிறார்கள். பரபரப்பு நிலவி வருகிறது.

More articles

Latest article