காஃபி கிங் மரணம்: கண்ணீருடன் சாலையோரங்களில் குவிந்த மல்நாடு மக்கள்….

Must read

சிக்மகளூர்:

நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள பிரபல கஃபே காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா மரணத்துக்கு அவரது சொந்த மாவட்டமான சிக்மகளூர் மாவட்டமே அஞ்சலி செலுத்தி வருகிறது.

மறைந்த சித்தார்த்தாவின் உடல் சொந்த ஊரான மல்நாடு வரும் வழியில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஏராளமானோர்  கண்ணீருடன்  சாலையோரங்களில் வரிசையாக காத்திருக்கின்றனர்.

மாவட்டத்தை சேர்ந்த அனைத்து தரப்பினருக்கும் சித்தார்த்தாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகை யில், அவர் உடல், சொந்த வீட்டுக்கு எடுத்து வரப்படும் பாதையில் நின்று தங்களது அஞ்சலியை செலுத்த காத்திருக்கின்றனர்.

ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தந்த  மல்நாடு காபிக்கிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு வேலை செய்து வரும் இளைஞர்கள், இளைஞிகள், மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள்  என அனைத்து தரப்பினரும், சித்தார்தாவின் உடல் எடுத்து வரப்படும் சாலையில் வரிசையாக நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

More articles

Latest article