ஓய்வுபெற்ற கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் கஃபே காஃபி டே இடைக்கால தலைவராக நியமனம்! 

Must read

சிக்மகளூர்:

ய்வுபெற்ற கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் எஸ்வி.ரங்கநாத், கஃபே காஃபி டே நிறுவனத்தின்  இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

கடல் பிரச்சினையில் சிக்கித்தவித்த பிரபல கஃபே காஃபி டே  நிறுவனர் சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை கொண்டுள்ள நிலையில், இன்று நாடு முழுவதும் உள்ள கஃபே காஃபி டே நிறுவனங்கள் அடைக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தி வருகின்றன. மேலும் அவரது மரணத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று சிக்மகளூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், கஃபே காஃபி டே நிறுவனத்தின்  இடைக்கால தலைவராக கர்நாடக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் எஸ்வி.ரங்கநாத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இவர் ஏற்கனவே 1990ம் ஆண்டு வாக்கில் கர்நாடக மாநில அரசின் காபிபோர்டு  தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். தற்போது சித்தார்தா மறைவைத் தொடர்ந்து இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து கூறியஎஸ்.வி.ரங்கநாத், , கஃபே காஃபி டே நிறுவனத்தை மேலும், ஊக்குவிக்க முடியும் என்றும், கடன் பிரச்சினைகளில் அதை காப்பாற்ற முடியும் என்று நம்புவதாக தெரிவித்து உள்ளார்.

 

More articles

Latest article