மத்தியப்பிரதேசம் மாநிலம் டிண்டோரி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தயரம் சாஹு என்பவர் கடந்த 40-45 ஆண்டுகளாக கண்ணாடிதுகள்களை சாப்பிட்டு வருவதாகவும், இந்த பழக்கத்திற்கு தான் அடிமையாக இருப்பதாகவும் அவர் ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

மருத்துவ ரீதியாக இந்த நிலைக்கு ஹையலோபாகியா (Hyalophagia) என்று அழைக்கப்படுகிறது.

இதுகுறித்து அவர் ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்; கண்ணாடியை உண்பது தமக்கு போதைப் பழக்கம் போல் ஆகி விட்டது , இந்தப் பழக்கத்தால் எனது பற்கள் பலமிழந்து விட்டது , இது உடலுக்கு தீங்கானது , யாரும் தன்னை போல் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ள அவர், கண்ணாடியை சாப்பிடுவதைக் குறைத்துக் கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.