தசாவதாரம் பல்ராம்நாயுடு ரிங்டோன் சமாச்சாரம்..

Must read

நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
தசாவதாரம் பல்ராம்நாயுடு ரிங்டோன் சமாச்சாரம்..
காலையில காக்கிநாடா மேடம் கிட்ட ஸ்டார்ட் ஆன பேச்சு, தமிழ்ல ஒரு நியூஸ் 7 சேனல் ஆரம்பிச்சப்போ ஒரு சின்னப்பொண்ணு கமலஹாசனை பெரிய இன்டர்வியூ பண்ண மேட்டர்ல போய் நின்னுது..
55 வருஷ சினிமா அனுபவம் கொண்ட கமல் கிட்ட அந்த பொண்ணு மாய்ஞ்சி மாய்ஞ்சி சுருதிஹாசனை பத்தியும் அக்ஷ்ரா ஹாசனை பத்தியும்தான் கேட்டுச்சு
அந்த நேரத்துலு ஒரு நண்பர் அந்த இண்டர்வியூ பத்தி நம்ம கிட்ட யோவ் இதெல்லாம் என்னய்யான்னு கேக்க, நாம ஆனந்த கண்ணீர் விட்டாம் .வேற வழியில்லை.
கமல் என்ற சினிமா லெஜண்ட்டை ரொம்ப கூர்ந்து கவனிச்சவங்களால மட்டுந்தான் அவரை முழுசா பாக்கமுடியும் சார் சொல்லி முடிச்சிகிட்டோம் மேடம்ன்னு சொன்னோம்.
”கமல்கிட்ட டைரக்டர் கிட்ட கே.எஸ் சேதுமாதவன், எம்டிவாசுதேவன் நாயர், கே.விஸ்வநாத், ஆர்சி சக்தி இவங்கள பத்தியெல்லாம் கேட்டா பல ஆச்சர்யமான விஷயங்களை சொல்லுவாரு..
தசாவதாரம் பல்ராம்நாயுடு செல்போன் ரிங்டோனா ஒரு பாட்டு வரும் எந்தோ சின்னதி ஜீவிதம்னு.. இந்தி தீஸ்ரி மன்சில் படத்தோட ஆஜா ஆஜா பாட்டு மியூசிக்கை அப்படியே ஓப்பன்ல வெச்சி, தெலுங்கு பாட்டு ஆரம்பிக்கும்
நாகேஸ்வரராவ் நடிச்சி 1971ல ரிலீசான படம். அந்த பாட்டை கமல், ஏன் சூஸ் பண்ணாருன்னா, அந்த படத்துக்கு தங்கப்பன்தான் டான்ஸ் மாஸ்டர், அவரோட சிஷ்யனான கமல் அஸிஸ்டெண்ட் டான்ஸ் மாஸ்டர்.
குறிப்பாக இந்த பாட்டுக்கு தங்கப்பன் மாஸ்டர் கமலைத் தான் கோரியோ கிராப் பண்ண வெச்சாருன் னு நம்மோட தெலுங்கு சினிபீல்டு ஹிஸ்டரிமேன் நம்மகிட்ட பேசும்போது சொன்னாரு மேடம்”
கடைசியில உண்மையிலேயே மேடத்துகிட்ட கேக்கநினைச்ச கோங்ரா சட்னி வெரைட்டீஸ் பத்தி கேக்க மறந்து போச்சு.. எல்லாம் பல்ராம்நாயுடுவால வந்த வினை…

More articles

Latest article