சாகர்:

த்திய பிரதேசத்தில் வயல் வேலைக்கு வர மறுத்த விவசாய கூலியான  பெண்ணின் மூக்கை அறுத்து கொடுமை செய்துள்ளார் முதலாளியான நில உரிமையாளர்.

மத்தியப் பிரேதச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ராஸா கிராமத்தின் தலித் சமூகத்தை சேர்ந்தவர் ஜானகி தானக் (35).  இவர் தனது கணவர் ராகவேந்தராவுடன் அக்கிராமத்தில் வசித்து, விவசாய கூலிகளாக வேலைக்கு சென்று வருகின்றனர்.

அதே ஊரை சேர்ந்த நரேந்திர ராஜ்புட் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் வயல் வேலை பார்த்து வந்துள்ளார் ஜானகி.

சமீபத்தில்,  நரேந்திர ராஜ்புட் ஜான்கியை தனது நிலத்துக்கு வேலைக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால்,  அதற்கு ஜானகி மறுப்பு தெரிவித்ததால் நரேந்திர சிங் தனது தந்தை சகாப் சிங்குடன் இணைந்து ஜானகியையும் அவரின் கணவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது தான் வைத்திருந்த கோடாலி மூலம்  ஜானகியின் முகத்தில் வெட்டியுள்ளார்.

இதில் ஜானகியின் மூக்கு  அறுப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் புந்தல்கண்ட் மருத்துவ கல்லாரி மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு‘ சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து பெண்கள் அமைப்பிடம் ஜானகி புகார் கூறினார். அதையடுத்து, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார்  நரேந்திர ராஜ்புட் மற்றும் அவரது தந்தை மீது  சாதி வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை  முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக நரேந்திர ராஜ்புட் மற்றும் அவரது தந்தை தலைமறைவாகி விட்டனர்.