இலங்கையின் கடற்படை தளபதியாக தமிழர் நியமனம்!

கொழும்பு

லங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியல் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவரை நியமித்து அதற்கான உத்தரவை வழங்கினார்.

இலங்கை கடற்படையின் 21வது தளபதியாக ரியட் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.  தற்போதைய  கடற்படையின்  தளபதியாக பதவி வகிக்கும் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் தளபதியாக நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் நடைபெற்று வந்த இனப்போராட்டங்கள் காரணமாக 30 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழர் ஒருவர் ராணுவத்தில் உயர்பதவியில் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.

இலங்கை கடற்படையின் கிழக்கு பிராந்திய  தளபதியாக  ணியாற்றி வந்த  ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் ஜெரமி லியான்ந்துரு சின்னையாவை, கடற்படை தளபதியாக நியமனம் செய்து இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தீர்மானித்து அறிவித்து உள்ளனர்.

தமிழரான  ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் ஜெரமி லியான்ந்துரு சின்னையா,  இலங்கையின் கண்டியை சொந்தவர்.  கண்டி ரினிட்டி கல்லூரியில் ஆரம்பக் கல்வியை கற்றுள்ளார். இதனையடுத்து கடற்படையின் திருகோணமலை கல்லூரியில்  அதிகாரியாக 1982 ம் ஆண்டு இணைந்து கொண்டு 1984 ம் ஆண்டு தனது கடற்படை அதிகாரி பட்டப்படிப்பை முடித்து பணியில் சேர்ந்தவர்.

கடந்த அரசின் பாதுகாப்பு  அமைச்சராக இருந்த  கோத்தபாய ராஜபக்சவினால் ஓரம் கட்டப்பட்டி ருந்த சின்னையாவிற்கு,  மைத்திரி – ரணில் தலைமையிலான அரசு முக்கிய பதவி வழங்கி உள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின் போது கடற்படை நடத்திய பெரும்பாலான தாக்குதல்களிலும் இவர் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே அவருக்கு உயர்பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Tamilar appointment as Naval Commander in Sri Lanka