காமன்வெல்த் 2018 : மேலும் பதக்கங்களை வென்று வரும் இந்தியா

Must read

கோல்ட் கோஸ்ட்

ஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் 2018 போட்டிகளில் இந்தியா மேலும் மேலும் பதக்கங்கள் வென்று வருகிறது.

காமன்வெல்த் 2018 ஆம் நாளான இன்று பெண்கள் பளுதூக்கும் போட்டி,  துப்பாக்கி சுடும் போட்டி ஆகியவைகளில் இரு தங்கப் பதக்கங்களும் ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்றது தெரிந்ததே.

தற்போது துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் ரவி குமார் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.

இது இந்தியா பெற்றுள்ள மொத்தப் பதக்கங்களில் 10 ஆவது பதக்கம் ஆகும்

டேபிள் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் மதுரிகா பாத்கர் மற்றும் மௌமா தாஸ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு நுழந்துள்ளனர்.

இவர்கள் வென்றால் மற்றும் ஒரு தங்கப்பதக்கம் இந்தியாவுக்கு கிடைக்கும்.

வெற்றி பெறவில்லை எனினும் வெள்ளிப்பதக்கத்துக்கு இவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

 

More articles

Latest article