கடலூர்: காவல்துறையில் பணியாற்றும் பெண்களின் வசதிக்காக கடலூர் மாவட்ட காவல்நிலையங்களில் நாப்கின் வழங்கும் மெஷின் வைக்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்ட காவல்துறை தரப்பில் முன்முயற்சியாக இவை தொடங்கப்பட்டு உள்ளது.

பணியாற்றும் பெண்களின் வசதிக்காக பல நிறுவனங்கள் இலவசமாக நாப்கின்களை வழங்கி வருகிறது. அதற்காக அலுவலகங்களிலேயே நாப்கின் வழங்கும் மெஷின் மற்றும் எரியூட்டும் மெஷின்கள் வைக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, தமிழகத்திலும் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளில் பெண்களின்  மாதவிடாய் காலத்தில் தேவைக்காக நாப்கின் வழங்கும் இந்தியரங்களும், எரியூட்டும் இயந்திரங்களும் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தற்போது, தமிழக காவல்துறையிலும், காவல் பணியாற்றும் பெண் காவலர்களின் வசதிக்காக நாப்கின் வழங்கும் இயந்திரம் வைக்கப்பட்டு உள்ளது. முன்முயற்சியாக  கடலூர் மாவட்ட காவல்துறையில், தற்போது அதற்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இது பெண் காவலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.