பீஜிங்:
சீன ஆயுதப்படைகளை விமர்சித்தால் தண்டனை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. இஸ்லாமிய குடியரசான பாகிஸ்தானின் நெருங்கிய நண்பன் என்பதை சீனா இந்த விஷயத்திலும் பின்பற்றுகிறது. கம்யூனிச நாடான சீனா, பாகிஸ்தான் சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்திய அதே சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ராணுவ வீரர்களை அவதூறு செய்வதற்கு எதிராக சீனா ஒரு புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே அமலில் உள்ள 2018 ஆம் ஆண்டின் சட்டத்தை அந்நாடு வலுப்படுத்தியது. 2018 ஆம் ஆண்டின் சட்டத்தின் கீழ் கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு இந்திய ராணுவத்துடன் நடந்த போரில் கொல்லப்பட்ட பி.எல்.ஏ வீரர்களை அவதூறு செய்ததற்காக பிரபல சீன வலைதளப் பதிவர் ஒருவருக்கு அண்மையில் தண்டனை வழங்கப்பட்டது.

வியாழக்கிழமையன்று நடைபெற்ற தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் அமர்வின் முடிவில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தின் படி, எந்தவொரு அமைப்பும் அல்லது தனிநபரும் படைவீரர்களின் மாண்பை அவதூறு செய்யவோ அல்லது இழிவுபடுத்தவோ கூடாது. ஆயதப் படையில் பணிபுரிபவர்களின் நற்பெயரை அவமதிக்கவோ அவதூறு செய்யவோ முடியாது.