சென்னை: பேனர்களை தடுக்க விதிகளை உருவாக்குகள் என தமிழக அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்பதற்கு பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 12 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தவிவகாரத்தில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு ஒன்றரை லட்சம் நிதிஉதவி வழங்கப்பட்டு விட்டதாக  கூறி, இந்த விவகாரத்துக்கு அமைச்சர் பொன்முடி முற்றுப்புள்ளி வைத்தார்.  இது சர்ச்சையானது.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொடிக்கம்பங்கள், பேனர்கள் வைக்க கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவு மீறப்படுவதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து கருத்து நீதிபதி தலைமை நீதிபதி, அனுமதியின்றி பேனர்கள் வைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என கூறியதுடன்,  மாவட்டங்களுக்கும், தாலுகா நீதிமன்றங்களுக்கும் தாம் ஆய்வு நடத்த சென்ற போது வழியில் ஏராளமான பேனர்களை பார்த்ததாகவும், தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகளை வகுக்க  வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

பின்னர், சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தருவது குறித்து 6 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், திமுகவுக்கும் உத்தரவிட்டதுடன், வழக்கை ஒத்தி வைத்தது.