சென்னை: திமுக கூட்டணியில் மார்க்சிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில் 2 தொகுதிகளிலும் அதிமுக அமைச்சர்களையும், ஒரு தொகுதியில் டிடிவி தினகரனையும் எதிர்த்து மார்க்சிஸ்டு களமிறங்குகிறது.

திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில்,  கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் வீதம் 24 தொகுதிகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3 தொகுதிகளும், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் வீதம் 3 தொகுதிகள், பார்வர்டு பிளாக் கட்சிக்கு  1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 173 தொகுதிகள் திமுக நேரடியாக களம்காண உள்ளது.  கூட்டணி கட்சியினர் 13 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். எனவே உதயசூரியன் சின்னம் 187 இடங்களில் களம் காண்கிறது.

இந்த நிலையில், மார்க்சிஸ்டு கட்சி சார்பில்

  1. கோவில்பட்டி
  2. திருப்பரங்குன்றம்
  3. திண்டுக்கல்
  4. கந்தர்வக்கோட்டை (தனி)
  5. அரூர் (தனி)
  6. கீழ்வேளூர் (தனி)!

ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில்,, திருப்பரங்குன்றரம், திண்டுக்கல் & கோவில்பட்டி தொகுதிகளில் கடுமையாக போட்டியை எதிர்கொள்ள உள்ளனர்.

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மற்றும் கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜு மற்றும டிடிவி தினகரன், திருப்பரங்குன்றம் தொகுதியில், முன்னாள் அமைச்சர் ராஜன்செலலப்பா ஆகியோரை எதிர்கொள்ள உள்ளனர்.