சென்னையில் அண்மையில் பெய்த புயல் மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டது.

இதில் மணலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளநீருடன் அருகில் இருந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெயும் சேர்ந்து அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தியது.

மேலும் வெள்ளநீருடன் கடலில் சென்று கலந்த கச்சா எண்ணெயால் மீனவர்களும் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நடந்த விசாரணையில் சென்னை பெட்ரோகெமிக்கல் லிமிடெட் (சி.பி.சி.எல்.) நிறுவனத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவே காரணம் என்று தெரியவந்தது.

இது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, மணலி பகுதியை அபாயகரமான மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும், தொழிற்சாலைகளைச் சுற்றியுள்ள அனைத்து குடியிருப்புகளையும் அகற்ற வேண்டும் என்றும்,

அவை அங்கீகரிக்கப்படாதவை அதனால் அவற்றை அகற்றி வெள்ள நீர் வழித்தடத்தில் உள்ள தடையை நீக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு சிபிசிஎல் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது.

இதன் மூலம் ஒட்டுமொத்த மணலி பகுதில் உள்ள குடியிருப்புகள் அகற்றப்பட்டு தொழிற்சாலைகளுக்கு உரிய இடமாக மாறக்கூடும் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.