சென்னை

அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

 

இன்று முதல் 27 ஆம் தேதி வரை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.

தற்போது தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.

அதாவது, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.