ஜெனிவா: குளிர்காலத்தில் கோவிட் பரவல்  அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இது நான்காம் அலையாக மாறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது  விஞ்ஞானிகள்  அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து உள்ளது. ஒமிக்ரானின் புதிய மாறுபாடு XBB பரவி வருவதால், எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

உலலக நாடுகளில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. இந்தியாவிலும் தினசரி பாதிப்பு 2ஆயிரத்துக்கும் கீழே குறைந்து விட்டது. ஆனால், சில நாடுகளில்  ஒமிக்ரானின் புதிய மாறுபாடு XBB  தொற்று பரவி வருவதால், மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர். Omicron’s XBB சப்வேரியன்ட் வேகமாக பரவுகிறது, ஒரு வாரத்தில் கேஸ்கள் இரட்டிப்பாகும்; ஆதிக்கம் செலுத்தும் கோவிட் திரிபு ஆகலாம் என தெரிவித்துள்ள ஆய்வாளர்கள்,  இதே நிலை நீடித்தால், 2023 பிப்ரவரி மாதத்திற்குள் தொற்று பரவல் பாதிப்பு சுமார் 18.7 மில்லியனாக உயரும் என்று அச்சம் தெரிவித்து உள்ளனர். இது கோவிட் நான்காம் அலையாக இருக்கும் என்றும் ச்சரிக்கை விடுக்கின்றனர்.

2022 ஜனவரியில் கடந்த குளிர்காலத்தில் மிகவும் அதிகமாக கோவிட் தினசரி பாதிப்பு இருந்தது. தற்போது, புதிய ஒமிக்ரானின் புதிய மாறுபாடு, குளிர்காலத்தில் கோவிட் நோய் ஏற்படுவதை துரிதப்படுத்தும் என்றாலும், இறப்புகள் எண்ணிக்கையில் அதிகரிப்பை ஏற்படுத்தாது என்று வாஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (IHME) தெரிவித்துள்ளது.

உலகளாவிய தினசரி இறப்புகள் பிப்ரவரி 1 அன்று சராசரியாக 2,748 பேராக இருக்கும் என்று அது கணித்துள்ளது, தற்போது கோவிட் இறப்பு எண்ணிக்கை தினசரி 1,660 பேர் என்ற அளவில் உள்ளது. IHME மதிப்பிட்டுள்ளபடி, அமெரிக்காவில் தினசரி நோய்த்தொற்றுகள் மூன்றில் ஒரு பங்கு முதல் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக அதிகரிக்கும், இது பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் குளிர் காலநிலை தொடர்பான உட்புறக் கூட்டங்களால் உந்தப்படுகிறது.

ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏற்கனவே உச்சத்தை அடைந்துள்ளது என அக்டோபர் 24ம் தேதி வெளியிடப்பட்ட வாஷிங்டன் பல்கலைக்கழக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்திற்குள், சுமார் 190,000 ஆக இருக்கும் நோயாளிகள் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் குறையும் என்று IHME எதிர்பார்க்கிறது. ஜெர்மனியில் சமீபத்திய கோவிட் பரவல் ஆனது Omicron துணை வகைகளான BQ.1 அல்லது BQ.1.1 காரணமாக இருக்கலாம் என்றும், அது வரவிருக்கும் வாரங்களில் ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.