லண்டன்: பிரிட்டன் நாட்டில் பன்னிரண்டு முதல் பதினைந்து வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, அங்கு பிபைசர் தடுப்பூசி செலுத்த  பிரிட்டன் மருந்து ஆணையம் அனுமதி வழங்கி உள்ளதாக அந்த ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி ஜூன் ரெய்ன் கூறியுள்ளார்.

உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவலில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த தடுப்பூசிகள் 18வயதுக்கு குறைந்தோருக்கும் செலுத்தும் பணியில் சில நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், பிரிட்டனும் 12 முதல் 15வயதுடையோருக்கு பிபைசர் தடுப்பூசி செலுத்தமுடிவு செய்துள்ளது. இதற்கனா ஒப்புதலை அந்நாட்டு அரசு நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கியுள்ளதாக பிரிட்டன் தடுப்பூசி ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார். மேலும்,   12 முதல் 15 வயதுடையவர்களுக்கு ஃபைசர் / பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு  “பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது” என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும்,   “அதற்கான மருத்துவ பரிசோதனை மிகவும் கூர்மையாக நாங்கள் கவனித்தோம்.  அதில் சிறப்பான முடிவுகள் கிடைத்துள்ளன.

12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களிடத்தில் Pfizer மற்றும் BioNTech மாதிரியான கொரோனா தடுப்பூசிகள் எப்படி செயல்படுகிறது. ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றனவா? இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்வது பாதுகாப்பு தானா? அதன் பயன் என்ன? என பல்வேறு முடிவுகளின் அடைப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.