டெல்லி: இந்தியாவில் குழந்தைகளுக்கு விரைவில் ஃபைசர் தடுப்பூசி கிடைக்கும் என எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில்,  கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் தற்பொழுது அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 18வயதுக்கு குறைவானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது எப்போது என கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

இதுகுறித்து செய்தியளார்களை சந்தித்த எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா, இந்தியாவில் விரைவில் ஃபைசர் தடுப்பூசி வர உள்ளதாகவும், இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் இருக்கும் எனவும்  தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டை சேர்ந்த மேலும் பல தடுப்பூசிகள் இந்தியாவிற்கு விரைவில் வர உள்ளது. குறிப்பாக பைசர் மற்றும் மாடர்னா ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் விரைவில் கிடைக்கும் என்றவர், இந்நத தடுப்பூசிகள் பெரியவர்கள் மட்டுமல்லாமல் கொரோனாவின் மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் விதமாக குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

அடுத்த மாதம் (ஜூலை)   முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் இந்தியாவிற்கு வரும் எனவும், இதன் மூலமாக நாட்டில் பலரும் தடுப்பூசிகள் எடுத்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.