கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இடம் பெற்றிருந்த பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜின் படம் இடம்பெற்றுள்ளது.

கொரோனா வைரசின் 2-வது அலையின் தீவிர தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும்  தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போதைய நிலையில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களாக போடப்பட்டு உள்ளது.  இரு டோஸ்களும் எடுத்துக்கொண்டவர்களுக்கு  தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த சான்றிதழில், பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. மேற்குவங்க முதல்வர் மம்தாவும் கடுமையாக எதிர்த்தார். இதையடுத்து, எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும், சில மாநிலங்களில் பிரதமர் மோடியின் படம் அகற்றப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  மேற்கு வங்காளத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இடம் பெற்றிருந்த பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டு,  அதற்கு பதிலாக  மம்தா பானர்ஜியின் படம் இடம் பெறும் என்று மேற்கு வங்காள அரசு உத்தரவிட்டுள்ளது.

மோடி படம் அகற்றப்பட்டு கொரோனா தடுப்பு சான்றிதழில் மம்தா பானர்ஜி படம் இடம் பெற்றதற்கு பா.ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.