டெல்லி: இந்தியாவில் கொரோனா 3வது அலை செப்டம்பர், அக்டோபரில் தாக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கணித்துள்ளதாக நிதிஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் தெரிவித்து உள்ளார். மேலும், அதை எதிர்கொள்ள இந்தியா தயாராக வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமான தாக்கத்தை உருவாக்கி இருப்பதுடன், உயிரிழப்புகளையும் அதிகரித்துள்ளது. தற்போதைய கொரோனா பரவல் காரணமாக மருந்து தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு என பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. இதையடுத்து கொரோனாவின் 3வது அலையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் தயாராக இருக்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் சரஸ்வத், கொரோனா 2வது அலையின் பரவலை தடுக்கும் நடவடிக்கையில் இந்தியா சிறப்பான பணிளயாற்றியது என்றும், அதனால் புதிய கேஸ்கள் வெகுவாக குறைந்துள்ளது என்று கூறியவர், அடுத்ததாக  வர இருக்கும் 3வது அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்றார்.

கோவிட் -19 இன் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது மற்றும் செப்டம்பர்-அக்டோபர் முதல் தொடங்கும் என்று கூறியவர்,   3வதுஅலை இளையோரை அதிகம் பாதிக்கக்கூடியதாக இருக்கும் என்றவர்ல, அதை   சமாளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தினார். இதுகுறித்து,  இந்தியாவின் தொற்றுநோயியல் நிபுணர்கள் மிகத் தெளிவான அறிகுறிகளை தெரிவித்து உள்ளனர். மூன்றாம் அலையை தவிர்க்க முடியாது எனக் கூறியுள்ளனர். இதனால், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும், 3வது அலை பரவுவதற்குள் முடிந்தவரையும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்றும்  தெரிவித்தார்.