மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாள் போலிஸ் காவலில் விசாரிக்க அனுமதி

Must read

க்கிம்பூர் கேரி

த்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில்  போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் ஏறியதில் 4 பேர் உயிர் இழந்தனர்.   இதையொட்டி வெடித்த வன்முறையால் மேலும் 4 பேர் உயிர் இழந்தனர்.   இதனால் நாடெங்கும் கடும் பரபரப்பு ஏற்பட்டது.    விவசாயிகள் மீது  ஏற்றப்பட்ட காரில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகக் கூறப்பட்டது.

இந்த காரில் ஆஷிஷ் மிஸ்ரா இல்லை என பாஜக தரப்பில் கூறப்பட்டது.   ஆயினும்  எதிர்க்கட்சிகளின் போராட்டத்துக்குப் பிறகு வழக்குப்  பதியப்பட்டு ஆஷிஷ் மிஸ்ராவிடம் 12 மணி நேர விசாரணை நடந்துள்ளது.  ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகின.  இந்நிலையில் 9 ஆம் தேதி அன்று அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது கொலை, கொலை எனச் சொல்ல முடியாத மனித இறப்புக்குக் காரணம், கொலைச்சதி எனக் குற்றம் சாட்டப்பட்டு வழக்குப் பதியப்பட்டுள்ளது.   அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.   நீதிமன்றம் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ராவை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.

More articles

Latest article