ஜெய்ப்பூர்:

அம்பேத்கர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மீது வழக்குப் பதிவு செய்ய ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 26ம் தேதி இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

அதில், அம்பேத்கர் யார்? என்றும், இடஒதுக்கீடு என்ற நோயை நாட்டில் பரப்பியவர் என்றும் சர்ச்சைக்குறிய தெரிவித்திருந்தார். இதை எதிர்த்து ராஷ்ட்ரீய வின் சேனா என்ற அமைப்பை சேர்ந்த வக்கீல் மெக்வால் என்பவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தனது சமூகம் குறித்து இவர் தெரிவித்துள்ள கருத்து சமூக மக்களை பாதிப்படைய செய்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதை ஏற்ற நீதிமன்றம் ஹர்திக் பாண்டியா மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.