பெங்களூரு:
திப்பு சுல்தான் மதநல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர் எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி சாரதாம்பா பீடத்தில் வழிபாடு நடத்தினார். அங்கு பொதுமக்கள், மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
பின்னர் ராகுல்காந்தி நிருபர்களிடம் பேசுகையில், ‘‘ மைசூர் மன்னர் திப்பு சுல்தான் மத நல்லிணக்கதின் அடையாளமாகத் திகழ்ந்தார். போர்க்காலத்தில் மிக நெருக்கடியில் சிக்கித் தவித்த போதும் பல கோவில்களுக்கு நிலங்களைக் தானமாக வழங்கினார். சிருங்கேரி மடத்துக்கும் திப்பு பல கொடைகள் அளித்துள்ளார்’’என்றார்.
கர்நாடகா மாநிலத்தில் திப்பு சுல்தான் குறித்த வரலாற்றில் பல்வேறு முரண்பாடான கருத்துக்கள் நிலவுகிறது. இந்த நிலையில் திப்பு சுல்தானை மதநல்லணிக்கவாதி என்று ராகுல்காந்தி புகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.