டில்லி:

டில்லி கிரிக்கெட் சங்க தலைவராக அருண்ஜெட்லி இருந்த போது பல கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் 3 பேர் குற்றம் சாட்டினர். இவர்கள் 4 பேர் மீதும் அருண் ஜெட்லி அவதூறு வழக்கு தொடர்ந்தார். ரூ.10 கோடி மானநஷ்ட ஈடு கேட்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை டில்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதுபோல் பல நீதிமன்றங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது 30க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் விசாரணையில் உள்ளது. இந்த வழக்குகளில் சமரச உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் வழக்கு தொடர்ந்தவர்களிடம் கெஜ்ரிவால் மன்னிப்பு கோரி வருகிறார்.

இந்த வகையில் அருண்ஜெட்லி தொடர்ந்த வழக்கில் கெஜ்ரிவால் உள்ளிட்ட 4 பேரும் நேற்று மன்னிப்பு கோரி கடிதம் அனுப்பியிருந்தனர். இதை அருண் ஜெட்லியும் ஏற்றுக் கொண்டு, வழக்கை முடித்து வைக்குமாறு அவரும், கெஜ்ரிவால் உள்ளிட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் கெஜ்ரிவால் உள்பட 4 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து, வழக்கையும முடித்துவைத்து உத்தரவிட்டனர்.