லஞ்சம் வாங்கினால் தூக்கு தண்டனை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து

Must read

சென்னை:
ழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால் தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த சூரிய பிரகாசம் என்பவர் தமிழகம் முழுவதும் போதுமான அளவில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்குனர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதில், தமிழகத்தில் 862 நேரடி கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இந்த கொரோனா காலகட்டத்தில் 12.25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு நெல் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதா என 1,725 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 30 முதல் 40 ரூபாய் வரை ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்கள் என்பது முற்றிலும் தவறானது என்றும் அந்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதை பார்த்த பின்னர் நீதிபதிகள் பணத்தை பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால் தான் இதுபோன்ற குற்றங்கள் சரி செய்யப்படும். அனைத்து அதிகாரிகளையும் குறிப்பிட்டு நீதிமன்றம் இந்த கருத்தை பதிவு செய்யவில்லை, லஞ்ச ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு இது பொருந்தும். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பதில் மனுவில் குறிப்பிடும்போது, நெல் கொள்முதல் செய்யும்போது ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்கள் என்பது முற்றிலும் தவறான தகவல் என கூறுவது எப்படி? இது நீதிமன்றத்துக்கு தவறான தகவலை அளிப்பதற்கு சமம் அல்லவா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் யார் ? முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் 105 அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ? என்பது தொடர்பான பதில் மனுவை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள், தமிழகத்தைப் பொறுத்தவரை ஊழல் என்பது புற்று நோயைப் போல அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. உரிய அறுவை சிகிச்சை என்பது செய்யப்பட்டால் தான் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்வது தவிர்க்கப்படும் என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள். நமது நாட்டில் விவசாயம் அழிக்கப்பட்டு வருவதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

More articles

Latest article