சென்னை:
நீட் தேர்வு பயிற்சி ஓரிரு நாளில் பயிற்சி தொடங்கும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வு பயிற்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் 14,975 பேர் இதுவரை பதிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட புள்ளி விவரத்தில் தகவல் தெரிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் கல்வித்துறை சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் கல்வித்துறை சார்பில் நீட் தேர்விற்காக பயிற்சி வகுப்புகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியை கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு பயிற்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் 14,975 பேர் இதுவரை பதிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 1380 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். மிகக் குறைந்தபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 70 மாணவர்கள் மட்டுமே பயிற்சிக்கு பதிவு செய்துள்ளதாகவும் ஓரிரு நாளில் பயிற்சி தொடங்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.