சென்னை: அமைச்சர் பொன்முடி உள்பட இந்நாள் முன்னாள் அமைச்சர்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் தாமாக விசாரணைக்கு எடுத்த  நிலையில் பொன்மீதா வழக்கு நவம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, அமைச்சர்கள்மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதும், ரத்து செய்யப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தற்போதைய திமுக அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஓபி.எஸ், வளர்மதி உள்பட பலர்மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்ட விவதங்களை கடுமையாக விமர்சித்ததுடன் இந்த வழக்குகளை தானே விசாரிப்பதாக அறிவித்தார். மேலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை பச்சோந்தி போல் செயல்படுவதாகவும் கடுமையாக சாடியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மதுரை உயர்நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டார். இந்த வழக்குகளை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்தார்.

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி  ஜெயச்சந்திரன், கடந்த  விசாரணையின்போது,  பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இதையடுத்து அந்த ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும்  (அக்.19) விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி, வேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மொழிபெயர்க்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், இந்த மாத இறுதியில் விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, வழக்கின் விசாரணையை நவம்பர் 3ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து மறு ஆய்வுக்கு எடுத்த வழக்கின் விசாரணையை, நவம்பர் மாதத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. சென்னை: கடந்த 1996 – 2001ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் 1கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக 2002ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சி காலத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இதனையடுத்து, விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து மாற்றப்பட்ட இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணை: அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!