சென்னை:

பாலியல் வன்புணர்வுக்கு எதிரான போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தமிழகஅரசுக்கு சென்னை உயர் நீதி மன்றம் ஆலோசனை வழங்கி உள்ளது.

பாலியல் வன்புணர்வு தொடர்பாக நாமக்கல்லை சேர்ந்த ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர்நீதி மன்றத்தில்  நடைபெற்றது. விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவர் மீதான வழக்கு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி பாதிக்கப்பட்டவரை விடுதலை செய்த நீதிமன்றம்,  போக்சோ சட்டத்தில் திருத்தங்கள்  செய்ய தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கியது.

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நாமக்கல்லை சேர்ந்த நபர் ஒருவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவர்மீதான குற்றச்சாட்டு  நிரூபிக்கப்படவில்லை என கூறி அவரை விடுதலை செய்தனர்.

இதனையடுத்து, போக்சோ சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர தமிழக அரசக்கு ஆலோசனை வழங்கினார்.

போக்சோ சட்டம் தொடர்பாக  விளம்பரம்படுத்தபட்டபோதும், அது தொடர்பான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று வேதனை தெரிவித்த  நீதிபதிகள்,  டீன் ஏஜ் திரைப்படங்களில் போக்சோ சட்டம் குறித்த எச்சரிக்கை இடம்பெறவேண்டும்  என்றும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், போக்சோ சட்ட குற்றங்களை குறைப்பதற்கு தேவையான  நடவடிக்கைகளை அரசு  எடுக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள்,  16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டு பாலுறவு கொண்டால், அதனை குற்றமாக கருதாமல், போக்சோ சட்டத்தில் விலக்கு அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும்  தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கினார்.

போக்சோ குற்றங்கள் பெருகுவதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்ய மன நல ஆலோசகர் கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.